ஜூனியர் டிரம்பின் காதலிக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
ஜூனியர் டிரம்பின் காதலிக்கு கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகனான ஜூனியர் டிரம்பின் காதலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் தனிமைப்  படுத்தப்பட்டுள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்றுநோய் கிட்டத்தட்ட 1,32,000 மக்களின்  உயிர்களைக் கொன்றுள்ளது. தினமும் 50  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த மகனின் ‘டேட்டிங்’ காதலியும், முன்னாள்  ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி பிரபலமான கிம்பர்லி கில்ஃபோயில் (51), சமீபத்தில் அதிபரின் பிரசார கூட்டத்தை பார்க்கவும், ரஷ்மோர் மவுண்டில்  உள்ள தெற்கு டகோட்டாவுக்கு வாணவேடிக்கை கொண்டாட்டத்தை பார்க்கவும் சென்றிருந்தார். இந்நிலையில், அதிபர் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு வழக்கமாக நடத்தப்படும் பரிசோதனை கில்ஃபோயிலுக்கும்  நடத்தப்பட்டது. அதில், கில்க்ஃபோயிலுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனையடுத்து அவர் தன்னை  தனிமைப்படுத்திக் கொண்டார்.  டிரம்பின் மூத்த மகனுக்கு நடந்த சோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. ஆனால்  முன்னெச்சரிக்கையாக சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

மூலக்கதை