இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வழிபாட்டுதலங்கள் ஜூலை 6 முதல் திறப்பு

தினகரன்  தினகரன்
இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வழிபாட்டுதலங்கள் ஜூலை 6 முதல் திறப்பு

டெல்லி: இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வழிபாட்டுத்தலங்கள் கொண்ட அனைத்து நினைவிடங்களும் ஜுலை 6 முதல் திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார். இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் கீழ்  உள்ள அனைத்து நினைவிடங்களையும், அனைத்துப் பாதுகாப்பு நிபந்தனைகளையும் முழுமையாகப் பின்பற்றி ஜூலை 6 முதல் திறக்கப்படும் என்று பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.\r மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் இந்த நினைவிடங்களில் பின்பற்றப்படும் என்றும் படேல் தெரிவித்தார். கட்டுப்பாட்டு மண்டலங்களில் இல்லாத நினைவிடங்களுக்குள் மட்டுமே பாரவையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் பாதுகாப்பில் உள்ள 3691 நினைவிடங்களில், வழிபாட்டுத்தலங்கள் கொண்ட 820 நினைவிடங்கள் ஜூன் 8 அன்று திறக்கப்பட்டன.\r சுத்திகரிப்பான்களால் தூய்மைப்படுத்துவது, சமூக விலகியிருத்தல் ஆகியவை உட்பட கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் நினைவிடங்களும், தலங்களும் உறுதி செய்ய வேண்டும். அந்தந்த மாநிலங்கள், மாவட்ட நிர்வாகங்கள் ஆகியவை வெளியிட்டுள்ள மாநில, மாவட்ட அளவிலான உத்தரவுகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மூலக்கதை