எப்படியெல்லாம் பந்தா பண்ணுறாங்கய்யா...₹2.9 லட்சம் மதிப்பில் தங்கத்தில் ‘மாஸ்க்’: மகாராஷ்டிரா நபருக்கு இணையவாசிகள் குட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
எப்படியெல்லாம் பந்தா பண்ணுறாங்கய்யா...₹2.9 லட்சம் மதிப்பில் தங்கத்தில் ‘மாஸ்க்’: மகாராஷ்டிரா நபருக்கு இணையவாசிகள் குட்டு

மும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரூ. 2. 9 லட்சம் மதிப்பில் தங்கத்திலான மாஸ்க் அணிந்துள்ள மகாராஷ்டிரா நபரை பலரும் இணையத்தில் கண்டித்துள்ளனர். உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாஸ்க் அணிதல், தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்தல், அத்தியாவசிய வேலைகளுக்கு வெளியே சென்றாலும் கூட்டத்தை தவிர்த்து தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற சில அடிப்படை விஷயங்களை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மாஸ்க் என்பது அத்தியாவசிய ஒன்றாகிவிட்ட நிலையில், தங்க நகைகளை அணிவதில் ஆர்வம் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியைச் சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவர், தங்கத்தினால் ஆன மாஸ்க் ஒன்றை தயாரித்து அணிந்து வருகிறார்.

சுமார் ரூ. 2. 89 லட்சம் மதிப்புடைய இந்த மாஸ்க்கில் சிறிய சிறிய துளைகள் இடப்பட்டுள்ளன.

இதனால் தனக்கு சுவாசத்துக்கு பிரச்னை இல்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஷங்கர் குரேட் கூறுகையில், ‘நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க இந்த தங்க மாஸ்க் உதவுமா? என்பது சந்தேகம் தான்.

ஆனால், எனக்கு தங்கத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என்ற ஆசை இருந்ததால், இவ்வாறு செய்தேன்’ என்றார். இதற்கிடையே, ஷங்கரின் தங்க மாஸ்க் குறித்து பதிவிட்டுள்ள இணையவாசிகள் தங்கத்தால் ஆன மாஸ்கால் உங்களுக்கு விளம்பரம் கிடைக்குமே தவிர நோய்த்தொற்றில் இருந்தெல்லாம் காக்காது என்று கிண்டல் அடித்தும், திட்டியும் எழுதி தீர்த்து வருகின்றனர்.



.

மூலக்கதை