பச்சிளம் குழந்தையை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பச்சிளம் குழந்தையை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே ம. கொளக்குடி எல்இபி தெருவை சேர்ந்தவர்  பாலமுருகன்(27). இவரது மனைவி பிரியங்கா(22).

இவர்களது குழந்தை மீனலோஷினி (1). இந்நிலையில் நேற்று மதியம் பிரியங்காவும் குழந்தையும் வீட்டில் தூக்கில் தொங்குவதாக காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தை, தாயையும் மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாயும், குழந்தையும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்தனர். வரும் 6ம் தேதி மீனலோஷினிக்கு 1வது பிறந்தநாள் என்பதால் குழந்தைக்கு நகைகள் போடுவது தொடர்பாக கணவன், மனைவிக்குள் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு விரக்தியில் குழந்தையை கொன்று விட்டு பிரியங்கா தானும் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு காரணமா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மகுடீஸ்வரன் (27).

இவரது மனைவி நித்யா (24). இவர்களது மகன் தர்ஷன் (1).

மகுடீஸ்வரன் குடும்பத்துடன் திருப்பூர் ஜெய் நகர் 2வது வீதியில் தங்கி அங்குள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மகுடீஸ்வரன் நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்றார். வீட்டில் நித்யாவும், தர்ஷனும் இருந்தனர்.

மகுடீஸ்வரன் பணி முடிந்து மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. மகுடீஸ்வரன் பலமுறை தட்டியும் நித்யா கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நித்யா தூக்கில் தொங்கிய நிலையிலும், தர்ஷன் கட்டிலிலும் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், `கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், நித்யா தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும், குழந்தையின் உடலில் எந்த காயமும் இல்லை.

ஆனால். குழந்தை இறந்த நிலையில் கட்டிலில் கிடந்தது.

எனவே குழந்தையை கொைல செய்துவிட்டு நித்யாவும் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது என்றனர்.

.

மூலக்கதை