சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான தலைமை காவலர் முத்துராஜ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான தலைமை காவலர் முத்துராஜ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட தலைமை காவலர் முத்துராஜ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மருத்துவப் பரிசோதனைக்குப்பின் காவலர் முத்துராஜ் நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 4 காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை