கொரோனா கோரத்தாண்டவம்,..5.29 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 11,189,388 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
கொரோனா கோரத்தாண்டவம்,..5.29 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 11,189,388 ஆக உயர்வு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.29 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி  கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், உலகளவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,189, 388 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை 5,29,064 பேர் உயிரிழந்த நிலையில் 6,297,202 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,836 பேர் கவலைக்கிடமான  நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649,889 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18,669 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 3,94,319 பேர் குணமடைந்தனர்.* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1385 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது.  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58,378 ஆக அதிகரித்துள்ளது.* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 132,101 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,890,588 ஆக அதிகரித்துள்ளது.* பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 63,254 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,543,341 ஆக அதிகரித்துள்ளது.* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,859 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 667,883 ஆக அதிகரித்துள்ளது.* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 44,131 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 284,276 ஆக உயர்ந்துள்ளது.* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,385 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 297,625 ஆக அதிகரித்துள்ளது.* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 34,833 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 241,184 ஆக உயர்ந்துள்ளது.* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 11,260 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235,429 ஆக அதிகரித்துள்ளது.* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,073 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 197,000 ஆக அதிகரித்துள்ளது.* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 29,893 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166,960 ஆக அதிகரித்துள்ளது.* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,765 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61,727 ஆக அதிகரித்துள்ளது.* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,113 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,335 ஆக அதிகரித்துள்ளது.* இந்தோனேஷியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3036 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,695 ஆக அதிகரித்துள்ளது.* குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,763 ஆக அதிகரித்துள்ளது.* சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,479 ஆக அதிகரித்துள்ளது.* ஜப்பானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 976 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,068 ஆக அதிகரித்துள்ளது.* மலேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,648 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில்  பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

மூலக்கதை