அமெரிக்க பார்லியில் சீனாவுக்கு எதிராக மசோதா நிறைவேற்றம்

தினமலர்  தினமலர்
அமெரிக்க பார்லியில் சீனாவுக்கு எதிராக மசோதா நிறைவேற்றம்

வாஷிங்டன்; ஹாங்காங்கின் சுதந்திரத்தை பறிக்கும் சீனாவுக்கு நெருக்கடி தரும் வகையில், அமெரிக்க பார்லிமென்டில் முக்கியமான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்தவர்களுடன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வங்கிகளுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்று உள்ளன.பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங்கை, 1997ல், சீனா வசம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒப்படைத்தனர். அப்போது, ஹாங்காங் சுதந்திர மாக செயல்படுவதற்கு சீனா ஒப்புதல் அளித்தது. இதன்படி, சீனாவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டாலும், நிர்வாகம் உள்ளிட்ட மற்ற விஷயங்களில் தன்னாட்சி பிரதேசமாக ஹாங்காங் இருந்து வந்தது.

பாதுகாப்பு


இந்நிலையில், ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் வகையில், சீனா, சமீபத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அங்கு அமல் படுத்தியது. இந்த சட்டத்தின் கீழ், ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோரை, 10 ஆண்டு வரை சிறையில் அடைக்க முடியும். ஹாங்காங்கில் உள்ள குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தவும் இந்த சட்டம் உதவும். இதற்கு, ஹாங்காங் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும், ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை வலுக்கட்டாயமாக, சீனா அமல்படுத்தியுள்ளது.இதையடுத்து, சீனாவுக்கு நெருக்கடி தரும் நடவடிக்கைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் துவக்கி யுள்ளன. அமெரிக்க பார்லி மென்டில், இது தொடர்பான மசோதா, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடவடிக்கை


அதில் கூறப்பட்டுள்ள தாவது:ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் சீனாவின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. ஹாங்காங்கில், ஜனநாயகத்துக்காக போராட்டம் நடத்தி வருபவர்களை ஒடுக்கும் சீன அதிகாரிகளுடன் வர்த்தக நடவடிக்கை யில் ஈடுபடும் வங்கிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை வலுக்கட்டாயமாக அமல்படுத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் போராட்டத்தை ஒடுக்கும் போலீசாருக்கு எதிராக சர்வதேச சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள், சர்வதேச அளவில் வேறு எந்தவிதமான பொருளாதார நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

மூலக்கதை