பாதுகாப்பு, கண்காணிப்பு பணியின் போது முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டும்: சென்னை மாநகர காவல் ஆணையர் பேட்டி

தினகரன்  தினகரன்
பாதுகாப்பு, கண்காணிப்பு பணியின் போது முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டும்: சென்னை மாநகர காவல் ஆணையர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோயை தடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு, கண்காணிப்பு பணியின் போது முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டும். கொரோனாவுக்கு தமிழகத்தில் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸ் வாகனம் மூலம் மக்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கப்படுகிறது எனவும் கூறினார்.

மூலக்கதை