'சுய டிசைன் உருவாக்கத்தில் கவனம்!' ஆடைத்துறை வல்லுனர் 'அட்வைஸ்'

தினமலர்  தினமலர்
சுய டிசைன் உருவாக்கத்தில் கவனம்! ஆடைத்துறை வல்லுனர் அட்வைஸ்

திருப்பூர்:வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து ஆடை தயாரிப்பு ஆர்டர்களை விரைந்து பெற ஏதுவாக, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், சுய டிசைன்களை உருவாக்கி கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும் என வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர்.திருப்பூரில், பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்கள், வெளிநாட்டு வர்த்தகர்கள் வழங்கும் டிசைனிலேயே ஆடை உற்பத்தி செய்கின்றன.
கொரோனாவால், ஆடை தயாரிப்புக்கு வழங்கப்படும் கால அவகாசம் குறையும் நிலை உள்ளது.வர்த்தகர்களிடமிருந்து ஆர்டர்களை வசப்படுத்த ஏதுவாக, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், டிசைன்களை முன்னதாகவே, சுயமாக உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:விரைவில் ஆடை தயாரிப்புக்கான புதிய ஆர்டர்கள் வரும். கொரோனாவால், இனி, உற்பத்திக்கு வழங்கும் இந்த கால அவகாசம் குறையும் நிலை உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான ஆடை பேஷன் போர்காஸ்ட், முன்னதாகவே உருவாக்கப்படுகிறது.இதை அடிப்படையாக கொண்டே, ஒவ்வொரு சீசனிலும், ஆடைகள் நிறம், வடிவம் உட்பட அனைத்தும் முடிவு செய்யப்படுகிறது.
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், டபிள்யூ.ஜி.எஸ்.என்., நிறுவனத்தின் போர்காஸ்ட் அடிப்படையில், வரும் காலத்துக்கான ஆடை டிசைன்களை சுயமாக உருவாக்கி, சேம்பிள் தயாரித்து கைவசம் வைத்து கொள்ள வேண்டும்இதன்மூலம், வர்த்தகர்கள் ஆர்டர் வழங்க துவங்கும்போது, தயார்நிலையில் உள்ள டிசைன்களை வழங்கி, ஒப்புதல் பெறலாம். ஆர்டர்களை விரைவாக வசப்படுத்தி, குறுகிய காலத்துக்குள் ஆடை தயாரித்து அனுப்பிவைத்துவிடமுடியும். சுய டிசைன்களை உருவாக்கும்போது, உற்பத்தி வேகம் பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை