உலக கோப்பை நடக்குமா?: மைக்கேல் ஹசி கணிப்பு | ஜூலை 03, 2020

தினமலர்  தினமலர்
உலக கோப்பை நடக்குமா?: மைக்கேல் ஹசி கணிப்பு | ஜூலை 03, 2020

மெல்போர்ன்: ‘‘ஆஸ்திரேலியாவில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடப்பது சந்தேகமாக உள்ளது,’’ என, மைக்கேல் ஹசி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில், வரும் அக். 18 முதல் நவ. 15 வரை ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக திட்டமிட்டபடி நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இதுகுறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி கூறியது: 

ஆஸ்திரேலியாவில் திட்டமிட்டபடி ‘டுவென்டி–20’ உலக கோப்பை நடத்தப்படுமா என்ற பயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் 15 அணிகள் வெளியில் இருந்து வருகின்றன. ஐ.சி.சி., வழிகாட்டுதல்களின் படி இவர்களை தனிமைப்படுத்திக் கொண்டு, பாதுகாப்பான முறையில் போட்டிக்கு தயாராவது என்பது மிகவும் சவாலானது. இதனை செயல்படுத்துவதை ஒரு கனவாகவே நினைக்கிறேன். 

இத்தொடர், 2021 அல்லது 2022க்கு ஒத்திவைக்கப்பட வேண்டும். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு எதிரான தொடரை நடத்துவதில் எவ்வித சிக்கலும் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் ஒரு அணி மட்டுமே வருவதால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்வது மிகவும் சுலபம்.

இவ்வாறு ஹசி கூறினார்.

மூலக்கதை