பவுலிங் பயிற்சியில் ஷமி | ஜூலை 03, 2020

தினமலர்  தினமலர்
பவுலிங் பயிற்சியில் ஷமி | ஜூலை 03, 2020

அம்ரோகா: இந்தியாவின் முகமது ஷமி பந்து வீச்சு பயிற்சியை துவங்கினார்.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 29. உ.பி.,யின் சகாஸ்பூரை சேர்ந்தவர். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்கினார். தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் புஜாரா, ரோகித், இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் தனிப்பட்ட முறையில் பயிற்சியை துவங்கினர். 

இந்த வரிசையில் ஷமியும் இணைந்தார். தனது பண்ணை வீட்டில் உள்ள மைதானத்தில் சகோதரர்களுடன் இணைந்து பவுலிங் பயிற்சியை துவக்கினார். இந்திய வீரர்கள் பயிற்சியின் போது அணியும் நீலநிற ‘ஜெர்சியுடன்’ காணப்பட்டார். 

இதுகுறித்த வீடியோவை தனது ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஷமி,‘எனது சகோதரர்களுடன் இணைந்து, எங்களது பண்ணை வீட்டில் சிறப்பான முறையில் பயிற்சியில் ஈடுபட்டேன்,’ என தெரிவித்துள்ளார். 

மூலக்கதை