விண்டீஸ் அணி அறிவிப்பு * கேபிரியலுக்கு இடம் | ஜூலை 03, 2020

தினமலர்  தினமலர்
விண்டீஸ் அணி அறிவிப்பு * கேபிரியலுக்கு இடம் | ஜூலை 03, 2020

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 15 விண்டீஸ் அணியில் கேபிரியல் இடம் பெற்றார். 

விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இங்கிலாந்து சென்றது. கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின் துவங்கவுள்ள இத்தொடரின் முதல் டெஸ்ட் 8ம் தேதி சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது. இதற்கான விண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்த அணியில் கணுக்கால் காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் ஷனான் கேபிரியல் 32, இடம் பெற்றார். 

இங்கு நடந்த இரு பயிற்சி போட்டிகளில் 3 இன்னிங்சில் பந்து வீசிய கேபிரியல், 8 விக்கெட் சாய்த்தார். இவர், கேப்டன் ஹோல்டர், கீமர் ரோச், செமர் ஹோல்டர், ஜோசப், ரெய்பருடன் இணைவதால், விண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சு கூடுதல் பலம் பெறலாம். பயிற்சி போட்டியில் சதம், அரைசதங்கள் விளாசிய டா சில்வா சேர்க்கப்படவில்லை. 

 அணி விபரம்

ஹோல்டர் (கேப்டன்), பிளாக்வுட், போனெர், கிரெய்க் பிராத்வைட், ஷமார் புரூக்ஸ், ஜான் கேம்பெல், ராஸ்டன் சேஸ், கார்ன்வல், டவ்ரிச், ஷனான் கேபிரியல், செமர் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், ரெய்பர், கீமர் ரோச்

 

பயிற்சி போட்டி ‘டிரா’

விண்டீசின் ஹோல்டர், பிராத்வைட் அணிகள் மோதிய 4 நாள் பயிற்சி போட்டி இங்கிலாந்தின், மான்செஸ்டரில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஹோல்டர் அணி 272, பிராத்வைட் அணி 178 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஹோல்டர் அணி 171/4 ரன் எடுத்த போட்டி போட்டி ‘டிரா’ ஆனது. டா சில்வா 56 ரன் எடுத்தார்.

 

அட்டவணை

தேதி போட்டி இடம்

ஜூலை 8–12 முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டன்

ஜூலை 16–20 2வது டெஸ்ட் மான்செஸ்டர்

ஜூலை 24–28 3வது டெஸ்ட் மான்செஸ்டர்

* போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கு துவங்கும்

மூலக்கதை