அண்டை நாடுகளிடம் விரோதம்: சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
அண்டை நாடுகளிடம் விரோதம்: சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன்: 'சீனா, அண்டை நாடுகளிடம் விரோத போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நழைந்து, 20 வீரர்களை சீனா கொன்றுள்ளது' என, அமெரிக்க எம்.பி., டாம் காட்டன் குற்றம்சாட்டியுள்ளார்.


லடாக் எல்லையில் சீன அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு, அமெரிக்கா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. அமெரிக்க எம்.பி.,க்கள் பலரும், இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.விரோதம்இந்நிலையில், அமெரிக்க செனட் சபையின் மூத்த உறுப்பினர், டாம் காட்டன் கூறியதாவது:சீனாவை ஆளும், கம்யூனிஸ்ட் கட்சி, அண்டை நாடுகளிடம் விரோத போக்கை வளர்த்து வருகிறது. தென் சீனக் கடலில், வியட்னாம், மலேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை மிரட்டி வருகிறது. அந்த நாடுகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

தைவான், ஜப்பான் வான்வெளியையும், சீனா ஆக்கிரமித்து வருகிறது. ஹாங்காங்கில் நடந்து வரும் விவகாரம் பற்றி சொல்லத் தேவையில்லை. ஆசியாவில், இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை, சீனா விரும்பவில்லை. தனக்கு போட்டியாக வந்து விடும் என்கிற பயத்தில் தான், இந்திய எல்லையில், அது பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு செயல்பாடாக தான், இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, இந்திய வீரர்கள், 20 பேரை சீன ராணுவம் கொன்றுள்ளது.முயற்சிஅமெரிக்காவின் நெருங்கிய நண்பன் இந்தியா. இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், அமெரிக்கா செய்யும். இதை சீனாவால் தடுக்க முடியாது.முதன்முதலில், சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா, இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதைப் பயன்படுத்தி, அண்டை நாடுகளிடம் பிரச்னையை ஏற்படுத்த, சீனா முயற்சித்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

சீனா தொடர்ந்து அத்துமீறல்'இந்தியாவிடம், ஷீ ஜிங்பிங் தலைமையிலான சீன அரசு, தொடர்ந்து அத்துமீறி வருகிறது' என, அமெரிக்க பார்லிமென்டால் நியமிக்கப்பட்ட கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது.லடாக் எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக, ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க, அமெரிக்க பார்லிமென்ட், கமிஷன் ஒன்றை நியமித்தது. அது தாக்கல் செய்துள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது:கடந்த, 2012ல், சீன அதிபராக, ஷீ ஜிங்பிங பொறுப்பேற்றபின், சீனா, அண்டை நாடுகளிடம், ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, அது, இந்தியாவிடம் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. எல்லைப் பகுதியில், 2013 - 20ம் ஆண்டுக்குள், ஐந்து முறை மோதலில் ஈடுபட்டுள்ளது. 2013க்கு முன், 1987ல், இந்தியா - சீனா இடையே எல்லையில் பெரும் மோதல் ஏற்பட்டது.எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா - சீன இடையே, பல முறை பேச்சு நடத்தப்பட்டது. பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.


ஆனால், வாக்குறுதிகளை மீறுவது, சீனாவின் வழக்கமாக உள்ளது. அதனால் தான், சீனாவுக்கும், அதன் அண்டை நாடுகளுக்கும், எப்போதும் நல்லுறவு நீடிப்பதில்லை. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சரியான நடவடிக்கைசீனாவின், 59 மொபைல், 'ஆப்'களுக்கு, இந்தியா விதித்துள்ள தடை குறித்த, தெற்காசியா விவகாரங்களுக்கான அமெரிக்க நிபுணர், ஜெப் ஸ்மித் கூறியதாவது:லடாக் எல்லையில் அத்துமீறிய சீனாவுக்கு, அந்நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 59 ஆப்களை தடை செய்து, இந்தியா சரியான பதிலடி கொடுத்துள்ளது. அதிலும், 'டிக் டாக்' ஆப் தடை செய்துள்ளது, மிக சரியான நடவடிக்கை. இந்த நடவடிக்கையை, அமெரிக்காவும் பின்பற்றலாம். இந்தியாவின் நடவடிக்கையால், சீனாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை