ரயில்வேயில் ஆட்கள் குறைப்பு இல்லை

தினமலர்  தினமலர்
ரயில்வேயில் ஆட்கள் குறைப்பு இல்லை

இந்திய ரயில்வேயில் ஆட்கள் குறைப்பு இல்லை, ஆனால் சுயவிவரம் மாற்றம் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய ரயில்வேதுறை அதிகமான தொழிலாளர்களை கொண்ட அரசு துறையாகும். லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றால் ரயில்சேவை முடங்கியது. தற்போது சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பொருளாதார ரீதியில் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.


இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் 50 சதவீத காலியிடங்களை குறைக்கவும், புது இடங்களை நிரப்புவதை நிறுத்தி வைக்கவும் பொது மேலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில் ஆட்கள் குறைப்பு இருக்காது என உறுதி அளித்துள்ளது. அதேவேளையில் சுயவிவரம் மாற்றம் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை