ஆபத்தை நோக்கி செல்கிறது கேரளா பினராய் அச்சம்

தினகரன்  தினகரன்
ஆபத்தை நோக்கி செல்கிறது கேரளா பினராய் அச்சம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று அவர் அளித்த பேட்டி வருமாறு:கேரளாவில் இன்று (நேற்று) 211 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 138 பேர் வெளி நாடுகளில் இருந்தும், 39 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். மற்றவர்களின் தொடர்பு மூலம் 27 பேருக்கு நோய் பரவியுள்ளது. கேரளாவில் நோய் தொற்று எண்ணிக்கை ஒரேநாளில் 200ஐ கடப்பது இதுவே முதல் முறை. கேரளாவில் இதுவரை மொத்தம் 4,964 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இது, கேரளா பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்

மூலக்கதை