கொரோனா பயத்தால் கோவை நகர் 'வெறிச்'

தினமலர்  தினமலர்
கொரோனா பயத்தால் கோவை நகர் வெறிச்

கோவை:கோவையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தது.கோவையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், ஆறாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கில், பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன.
அதில் பல தளர்வுகள் நீக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளன. ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் உள்ளே அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.பார்சல் ஆர்டர்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. சில நடுத்தர ஓட்டல்கள் மட்டும், 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படுகின்றன. மளிகைக்கடைகள், பேன்சி ஸ்டோர்கள், ஜவுளிக்கடைகள் திறந்து இருந்தாலும், வாங்க ஆட்கள் இல்லை. காந்திபுரம், ஒப்பணக்காரவீதி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட கோவையின் முக்கிய பகுதிகளில், ஜன நடமாட்டம் குறைந்துள்ளது. கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் ரோட்டில் செல்கின்றன.

மூலக்கதை