பாகிஸ்தானில் பஸ் மீது ரயில் மோதல்; 20 பேர் பலி

தினமலர்  தினமலர்
பாகிஸ்தானில் பஸ் மீது ரயில் மோதல்; 20 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பஸ் மீது ரயில் மோதியதில் 20 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

சீக்கிய யாத்ரீகர்கள் ஒரு பஸ்சில் நன்கானாசாகிப் சென்று பெஷாவர் திரும்பி கொண்டிருந்தனர். இந்நேரத்தில் சேக்குவாரா என்ற பகுதியில் ஆள் இல்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது பஸ் மீது ஷா உசேன் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்தில் 15 பேர் பலியாகினர். மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பலர் காயங்களுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள் பலர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாக்., பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ரயில் விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.


சேக்புரா ரயில்வே அதிகாரி முகம்மது காஸி சலாவுதீன், ரயில்வே இன்ஞ்ஜினியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை