இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60.73% அதிகரிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்..!!

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60.73% அதிகரிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்..!!

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 60.73% ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 1074 சோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது எனவும் கூறியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு போடப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து ஊடரங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் 5-ம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்தபோது, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய 6-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து தொற்றிக்கொள்ளும் கொரோனாவிற்கு கடிவாளம் போடமுடியாமல் திணறுகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,04,641-லிருந்து 625,544-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,834-லிருந்து 18,213 -ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து  குணமடைந்தோர் எண்ணிக்கை 3,59,859-லிருந்து 379,892 -ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 379 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாட்டில் ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,27,439 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருவோர் விகிதம் அதிகரித்துள்ளது. இன்றளவில் குணமடைவோர் விகிதம் 60.73% அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை