ஜூலை 7 முதல் கொரோனா தடுப்பு மருந்து 'கோவாக்சின்' மனிதர்களுக்கு பரிசோதனை : சென்னை உட்பட 12 இடங்களை தேர்வு செய்தது ஐசிஎம்ஆர்!!!

தினகரன்  தினகரன்
ஜூலை 7 முதல் கொரோனா தடுப்பு மருந்து கோவாக்சின் மனிதர்களுக்கு பரிசோதனை : சென்னை உட்பட 12 இடங்களை தேர்வு செய்தது ஐசிஎம்ஆர்!!!

டெல்லி : கொரோனாவை தடுக்க உருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் என்ற மருந்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி செயல்பாட்டிற்கு கொண்டு வர இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது. ஜூலை-7 முதல் சோதனை முயற்சியாக கொரோனா தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.*ஹைதராபாத்தில் செயல்படும் பாரத் பையோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேடிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் கோவாக்சின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. *மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதியை பெற்ற பின்னர், வருகிற ஜூலை 7ம் தேதி முதல் சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் 12 மருத்துவமனைகளில் கோவாக்சின் மருந்து பரிசோதனை செய்யப்படுகிறது. *இந்த சோதனைகளை விரைந்து நடத்தி முடிக்குமாறு, காட்டாங்குளத்தூர் தனியார் மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் 12 மருத்துவமனை நிர்வாகங்களுக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கடிதம் எழுதி உள்ளது. *மனிதர்கள் மீதான கொரோனா பரிசோதனைக்கு முன்னுரிமை கொடுத்து, ஆய்வை விரைந்து நடத்தி முடிக்குமாறு, அந்த கடிதத்தில் ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது.* பரிசோதனை முடிவுகளை பொறுத்து சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி அன்று கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிப்பது குறித்து மத்திய அரசு இறுதி முடிவை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அளவில் 12 மருத்துவமனைகள் தேர்வு!!சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் உள்ள மருத்துவமனை, விசாகப்பட்டினம், ரோஹ்டாக், டெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கொரோக்பூர், ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர் மற்றும் கோவா ஆகிய இடங்களில் மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இதற்கிடையே, ஐசிஎம்ஆரின் இந்த முயற்சிக்குப் பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை