ஸ்டோக்ஸ் அணி திணறல் | ஜூலை 02, 2020

தினமலர்  தினமலர்
ஸ்டோக்ஸ் அணி திணறல் | ஜூலை 02, 2020

சவுத்தாம்ப்டன்: பட்லர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஸ்டோக்ஸ் அணி திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இங்கிலாந்து அணி சொந்தமண்ணில் விண்டீசிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் 8ம் தேதி சவுத்தாம்ப்டனில் துவங்க உள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி, பட்லர், ஸ்டோக்ஸ் தலைமையில் பிரிந்து, மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது.

சவுத்தாம்ப்டனில் நடக்கும் இதில், முதல் நாள் முடிவில் பட்லர் அணி எடுத்த 287/5 ரன்னுடன் முதல் இன்னிங்சை ‘டிக்ளேர்’ செய்தது.

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஜென்னிங்ஸ் 23, சிப்லே 12, பேர்ஸ்டோவ் 11 ரன் எடுத்தனர். கிராலே 43 ரன் எடுக்க, ஸ்டோக்ஸ் அணி முதல் இன்னிங்சில் 188/8 ரன் என திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பட்லர் அணியின் ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினார். 


மேயர்ஸ் அரைசதம்

விண்டீசின் ஹோல்டர், பிராத்வைட் அணிகள் மோதும் 4 நாள் பயிற்சி போட்டி இங்கிலாந்தின், மான்செஸ்டரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஹோல்டர் அணி 272 ரன் எடுத்தது. நேற்று மேயர்ஸ் (62) அரைசதம் கைகொடுக்க, பிராத்வைட் அணி முதல் இன்னிங்சில் 145/8 ரன்கள் எடுத்திருந்தது.

 

இங்கிலாந்துக்கு ‘ஓ.கே.,’

கறுப்பின மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், விண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து வீரர்கள் ‘பிளாக்ஸ் லிவ் மேட்டர்’ என்ற வாசகம் பொறித்த ஜெர்சி அணிந்து விளையாட, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அனுமதி தந்தது.

மூலக்கதை