இங்கிலாந்து செல்கிறது இந்தியா * முத்தரப்பு பெண்கள் தொடரில் பங்கேற்க | ஜூலை 02, 2020

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து செல்கிறது இந்தியா * முத்தரப்பு பெண்கள் தொடரில் பங்கேற்க | ஜூலை 02, 2020

 ..புதுடில்லி: முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்திய பெண்கள் அணி இங்கிலாந்து செல்லவுள்ளது.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் முடங்கிய விளையாட்டு உலகம் தற்போது மீண்டு வருகிறது. இந்தியாவில் ஒத்திவைக்கப்பட்ட 13வது ஐ.பி.எல்., தொடர் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே இந்திய பெண்கள் அணி முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்க, இங்கிலாந்து செல்கிறது.

மூன்றாவது அணியாக தென் ஆப்ரிக்கா பங்கேற்க உள்ளது. இத்தொடர் வரும் செப்., 10ல் துவங்க உள்ளது. இதற்காக மிதாலி ராஜ் தலைமையிலான வீராங்கனைகள் ஆக., 20ல் இங்கிலாந்து செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனுமதி இன்னும் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கவில்லை.

விரைவில் புதியதாக தேர்வு செய்யப்படவுள்ள தேர்வுக்குழுவினர், இந்திய பெண்கள் அணியை தேர்வு செய்ய உள்ளனர்.

மூலக்கதை