டெல்லியில் இன்று புதிதாக 2373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; ஒரே நாளில் 61 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
டெல்லியில் இன்று புதிதாக 2373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; ஒரே நாளில் 61 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லியில் இன்று மேலும் 2373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 91,175 ஆக உயர்ந்து உள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 61 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,864 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இதேபோன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 63,007 ஆகவும், 26,304 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை