Friends of Police விசாரணையில் தலையிட முடியாது; சினிமா ஸ்டைலில் போலீஸ் பணி; IG முருகன் ஓபன் டாக்

FILMI STREET  FILMI STREET
Friends of Police விசாரணையில் தலையிட முடியாது; சினிமா ஸ்டைலில் போலீஸ் பணி; IG முருகன் ஓபன் டாக்

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ் இருவரும் போலீசாரின் சித்ரவதையால் உயிரிழந்தனர்.

இதனையடுத்து காவல் துறையில் பலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

தற்போது தென்மண்டல ஐ.ஜி.யாக முருகன் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசுகையில்… தென் மண்டல காவல் துறை தலைவராக இன்று பொறுப்பேற்றுள்ளேன். சிபிசிஐடி போலீசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம்.

லாக்அப் மரணங்களை காவல்துறை ஆதரிக்கவில்லை. அது தடுக்கப்பட வேண்டும்.

தற்போது பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. நீதிமன்ற கட்டளைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதில் உண்மையல்ல.

சாட்சியாக மாறிய காவலர் ரேவதிக்கு தேவையான பாதுகாப்பும் ஒரு மாத விடுப்பும் ஊதியத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக வரும் உதவி ஆய்வாளர்கள் சினிமா பட பாணியில் செயல்படுகிறார்கள் என்கின்றனர். அது ஓரளவு உண்மை தான். இனி பயிற்சியில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

Friends of Police ற்கு காவல்துறைக்கான உரிமை இல்லை. காவல்துறை விசாரணையில் அவர்கள் தலையிட முடியாது. தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”.

எனப் பேசினார்.

மூலக்கதை