எவர்டன் வீக்ஸ் மரணம்: சச்சின், கும்ளே இரங்கல் | ஜூலை 02, 2020

தினமலர்  தினமலர்
எவர்டன் வீக்ஸ் மரணம்: சச்சின், கும்ளே இரங்கல் | ஜூலை 02, 2020

பிரிட்ஜ்டவுன்: முன்னாள் விண்டீஸ் கிரிக்கெட் வீரர் எவர்டன் வீக்ஸ் மறைவுக்கு, இந்தியாவின் சச்சின், கும்ளே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சர் எவர்டன் வீக்ஸ் 95. மொத்தம் 48 டெஸ்டில் (4,455 ரன், சராசரி 58.61, 1948–58) பங்கேற்றுள்ள இவர், 1948ல் தொடர்ச்சியாக 5 சதமடித்து (141 ரன், எதிர்: இங்கிலாந்து, 128, 194, 162, 101 ரன், எதிர்: இந்தியா) புதிய உலக சாதனை படைத்திருந்தார். ஓய்வுக்கு பின், பயிற்சியாளர், அணி மானேஜர், ஐ.சி.சி., ‘மேட்ச் ரெப்ரி’ என, பல்வேறு பொறுப்பு வகித்த இவர், வயது முதிர்வு காரணமாக காலமானார்.

இந்திய ஜாம்பவான் சச்சின் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘எவர்டன் வீக்ஸ் மறைவு செய்தி வருத்தம் அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்,’’ என, தெரிவித்திருந்தார்.

அனில் கும்ளே கூறுகையில், ‘‘விண்டீஸ் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் மறைவு கவலை அளிக்கிறது. இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்,’’ என்றார்.

இதேபோல, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), விவியன் ரிச்சர்ட்ஸ், இயான் பிஷப், லட்சுமண், ரவி சாஸ்திரி, டேரன் சமி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை