சமந்தாவின் பெல்ட் ரூ. 70 ஆயிரம், ஹேண்ட் பேக் ரூ. 3 லட்சம்

தினமலர்  தினமலர்
சமந்தாவின் பெல்ட் ரூ. 70 ஆயிரம், ஹேண்ட் பேக் ரூ. 3 லட்சம்

பொதுவாகவே நடிகைகள் உடுத்தும் உடைகள் மற்றும் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கும். தாங்களும் அதே போன்றவற்றை அணிய வேண்டும் என்ற ஆர்வமே அதற்கு முக்கியக் காரணம். ஆனால் அவை எல்லோருக்கும் எளிதில் சாத்தியப்பட்டு விடுவதில்லை. காரணம் அவற்றின் விலை.

அடிக்கடி இப்படி நடிகைகளின் ஹேண்ட் பேக், பெல்ட் போன்றவற்றின் விலை வெளியாகி ஷாக் கொடுக்கும். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கும் நடிகை சமந்தா பயன்படுத்தும் சில பொருட்களின் விலை விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

அவர் விரும்பிப் பயன்படுத்தும் லூயிஸ் வியூட்டன் கிராஸ் பாடி பேக் ஒன்றின் விலை ரூ. 2, 17,000 ஆகும். இதே போல் அவர் பயன்படுத்தும் மற்றொரு ஹேண்ட் பேக்கான கஸ்ஸி மார்மோண்ட் பேக்கின் விலை ரூ. 1,95,000. ஹேண்ட் பேக்குகள் மட்டுமின்றி அவர் பயன்படுத்தும் பெல்ட்டுகளுமே காஸ்ட்லியானவை தான்.

முன்பு அவர் விரும்பிப் பயன்படுத்தியது கஸ்ஸி பெல்ட். அதன் விலை ரூ. 40,000 ஆகும். தற்போது மெய்சன் வேலண்டினோ பெல்ட்டுகளை அவர் பயன்படுத்தி வருகிறார். அதன் விலை ரூ. 72,000. இது தவிர அவர் பயன்படுத்தும் காலணிகளின் விலையும் லட்சக்கணக்கில் உள்ளது.

மூலக்கதை