மாஸ்டர் படத்தில் கொடூர வில்லனாக விஜய்சேதுபதி

தினமலர்  தினமலர்
மாஸ்டர் படத்தில் கொடூர வில்லனாக விஜய்சேதுபதி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ள படம் மாஸ்டர். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி மாபெரும் ஹிட்டான நிலையில், பட ரிலீசை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசாகி இருக்க வேண்டிய இப்படம், கொரோனா ஊரடங்கால் தொடர்ந்து தள்ளிப் போய் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. படம் மீதான எதிர்பார்ப்பிற்கு விஜய் மட்டுமல்லாமல், விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

படத்தின் நாயகனா, வில்லனா அல்லது குணச்சித்திர கதாபாத்திரமா என எதைப் பற்றியும் கவலைப்படாமல், தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படமாகப் பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும், விக்ரம் வேதா படத்தில் வித்தியாசமான நெகடிவ் கதாபாத்திரத்திலும் நடித்து பாராட்டுகளை அள்ளினார். அந்த வரிசையில் மாஸ்டர் படத்திலும் வில்லனாக மிரட்டியிருப்பார் என்பது பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமே உறுதியாகி விட்டது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார் விஜய் சேதுபதி. அதில், "மாஸ்டர் திரைப்படத்தில் நான் கொடூரமான வில்லனாக நடித்துள்ளேன், மேலும் "Pure Evil Character" என அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை