சீனா பாணியில் ரஷ்யாவிலும் கதை முடிந்தது இனிமேல் 2036 வரை புடின் தான் அதிபர்: பொது வாக்கெடுப்பில் 78% மக்கள் ஆதரவு

தினகரன்  தினகரன்
சீனா பாணியில் ரஷ்யாவிலும் கதை முடிந்தது இனிமேல் 2036 வரை புடின் தான் அதிபர்: பொது வாக்கெடுப்பில் 78% மக்கள் ஆதரவு

மாஸ்கோ: ரஷ்யாவின் அதிபர் புடின் 2036ம் ஆண்டு வரை பதவியில் நீட்டிப்பதற்கு 78 சதவீத பொதுமக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.ரஷ்யாவில் தொடர்ந்து இரு முறைக்கு மேல் ஒருவர் அதிபராக நீடிக்க முடியாது. தற்போதைய ரஷ்ய அதிபர் புடின் 2008ல் பதவியேற்று, 2 முறை அதிபராக இருந்துள்ளார். அவரது பதவிக்காலம் 2024ல் முடிவடைகிறது. அதன் பிறகும் அவர் தேர்தலே இல்லாமல் அதிபர் பதவியில் நீடிப்பதற்காக, அரசியல் சாசன சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நடந்த ஓட்டெடுப்பில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணி முடிக்கப்பட்டன. இதில், 77.9 சதவீதம் பேர் ரஷ்ய அதிபர் பதவியை நீட்டிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதனால், 2036ம் ஆண்டு வரை ரஷ்யாவின் அதிபராக புடின் தொடர இனி எந்த சிக்கலும் இல்லை என்பதை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவிலும் தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங், இதேபோல் வாழ்நாள் முழுவதும் அதிபராக இருப்பதற்கு சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. இவை இரண்டும் கம்யூனிஸ்ட் நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.மோடி - புடின் போனில் பேச்சுபிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாமிர் புடினுடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார். அப்போது, 2ம் உலகப் போரில் ரஷ்யா வெற்றி பெற்ற 75 ஆண்டு நிறைவு விழாவுக்கும், அரசியலமைப்பு சட்ட திருத்தங்களுக்கு வாக்களிப்பது வெற்றிகரமாக நிறைவேறி உள்ளதற்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், கொரோனா பரவலையும், அதன் பாதிப்புகளையும் சரிசெய்ய இரு நாடுகளும் எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைகளை இரண்டு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள இருதரப்பு உச்சிமாநாட்டுக்கான ஆலோசனைகளை தொடர இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

மூலக்கதை