3 மாதங்களுக்குப் பிறகு மபி.யில் சிவராஜ் சவுகான் அமைச்சரவை விரிவாக்கம்: 28 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

தினகரன்  தினகரன்
3 மாதங்களுக்குப் பிறகு மபி.யில் சிவராஜ் சவுகான் அமைச்சரவை விரிவாக்கம்: 28 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக, 28 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மற்றும் சுயேச்சை கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதல்வராக பதவியேற்றார். கடந்த மார்ச்சில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனது ஆதரவு எம்எல்ஏ.க்கள் 20 பேர் திடீரென ராஜினாமா செய்தார். அவர்கள் பாஜ.வில் இணைந்தனர். இதன் காரணமாக காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 23ல் சிவராஜ் சிங் தலைமையிலான பாஜ அரசு பதவியேற்றது. அதற்கு மறுநாள் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அமைச்சரவை பதவியேற்பு தள்ளிப் போனது. கடந்த ஏப்ரல் 21ம் தேதி, ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவாளர்கள் 2 உட்பட 5 பேர் மட்டுமே அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், கொரோனா ஊரடங்கு, மாநிலங்களவை தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்ந்து காலதாமதமாகி வந்தது. இந்நிலையில், நேற்று அமைச்சரவை விரிவாக்கம் நேற்று நடந்தது. புதியதாக 28 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். போபாலில் உள்ள ராஜ்பவனில் அவர்களின் பதவியேற்பு விழா நேற்றே நடைபெற்றது. உத்தரப் பிரதேச ஆளுநரும், மத்தியப் பிரதேச கூடுதல் பொறுப்பு ஆளுநருமான ஆனந்திபென் படேல், இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.ஜோதிராதித்யா கை ஓங்கியது* அமைச்சரவை விரிவாக்கத்தில் ஜோதிராதித்யாவின் ைக ஓங்கியுள்ளது. அவருடைய ஆதரவாளர்கள் 12 பேருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.* ஜோதிராதித்யா சிந்தியாவின் அத்தையான யசோதா ராஜே சிந்தியா, கேபினட் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.* புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களில் 20 பேர் கேபினட் அந்தஸ்தும், 8 பேர் தனி பொறுப்பு அந்தஸ்தும் பெற்றுள்ளனர்.* இத்துடன், முதல்வர் சிவராஜ் சவுகானின் அமைச்சரவை எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை