எத்தனை பேர் வேலை பறிபோகுமோ...அலெக்சா! என் வங்கி கணக்கில் எவ்ளோ பணம் இருக்கு

தினகரன்  தினகரன்
எத்தனை பேர் வேலை பறிபோகுமோ...அலெக்சா! என் வங்கி கணக்கில் எவ்ளோ பணம் இருக்கு

* வங்கிகளில் பரவும் புது ஆபத்து* பிட்சா கடை வரை வந்து விடும்?* அமெரிக்காவில் யுஎஸ் பாங்க் தான் முதன் முதலில் அலெக்சா, சிரி, கூகுள் அசிஸ்டெண்ட் மூன்றின் மூலமும் வங்கி சேவையை ஆரம்பித்தது. * கேபிடல் ஒன், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கிகள்  அடுத்து அமல் செய்தன. மற்ற சிறிய வங்கிகளும் டிஜிட்டல் அசிஸ்டெண்ட் வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு செய்தன.* கணக்கில் பணம் கையிருப்பு, பில்கள் பணம் கட்டுவது போன்றவற்றுக்கு இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.* ஆன்ட்ராய்டு போன்களில் இவற்றை பயன்படுத்தலாம். ஆனால், ஆப்பிள்் சிரி, எதையும் நுழைய விடாது. * அலெக்சா உட்பட இந்த மூன்றும் சிரிக்கு எதிரிகள். சிரியில் கேட்டால், உங்களுக்கு வங்கி கணக்கில் பணம் எவ்வளவு என்பது மட்டும் பதிவு செய்யும். * இந்தியாவில் இது பிரபலமாகிவிடும்.  ஆனால், சைபர் கிரைம் அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில் இதனால் மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது.மும்பை: ஹே...அலெக்சா, என்னா நேரம் இப்போ...என்னா கிழமை இன்னிக்கு...யாரெல்லாம் போன் பண்ணாங்க...   இதெல்லாம் பழசுங்க...இப்போ கொரோனா காலத்தில் ஊடுருவ தயாராகி விட்டது பலரின் வேலைவாய்ப்பை பறிக்க இந்த அலெக்சாவும்.   அலெக்சா, டிஜிட்டல் உலகில் மக்களை இன்னும் சோம்பேறி ஆக்க அவதாரம் எடுத்த பல தொழில்நுட்ப வசதிகளில் இதுவும் ஒன்று. சில ஆண்டு முன் இது அறிமுகம் ஆன போது, இந்தியாவில் பலரும் வாங்கி பயன்படுத்தினர். வீட்டில் தந்தை முதல் பிள்ளைகள் வரை ஆளுக்கு ஒரு அலெக்சா - டிஜிட்டல் பிஏ இருக்கும்.   அதில் குறிப்பிட்ட சில விஷயங்கள் மட்டும் அவ்வப்போது ப்ரோகிராம் செய்யப்பட்டிருக்கும் என்பதால் அந்த கேள்விகளுக்கு மட்டும் தான் பதில் வரும். ஆனால், போகப்போக பல விஷயங்கள் அதில் ப்ரோகிராம் செய்யப்பட்டு, குடும்பத்துக்குள் விஷயங்களை பரிமாற, தகவல்களை பெற, கேட்க பயன்பட துவங்கியது. ஆனால், சில சமயம், வழக்கமான டிஜிட்டல் எர்ரர்...அதான் டிஜிட்டல் மறதி காரணமாக அதே பெயரில் உள்ள வேறு யாருக்கும் கூடபோய் விடும். உதாரணமாக, கான்டெக்ட் லிஸ்ட்டில் ப்ரோக்ராம் செய்யப்பட்ட பெயர்களில் சரிவர துல்லியமாக சொல்லாவிட்டால் வழிமாறி வேறு யாருக்கோ போய் விடும் ஆபத்தும் உள்ளது.   இதன் காரணமாகவே பலரும் இந்த டிஜிட்டல் பிஏவை குப்பையில் போட்டும் விட்டனர். ஆனால், இப்போது, வங்கிகளில் இந்த அலெக்சா உட்பட டிஜிட்டல் உதவியாளர்கள் பரவி வருகின்றனர். அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பரவி விட்ட இந்த அலெக்சா உட்பட டிஜிட்டல் உதவியாளர்கள், பணம் டிரான்ஸ்பர் செய்வதற்கு கூட பயன்படுத்தப்படுகிறது.  ‘வாய்ஸ் கமாண்ட்’ மூலம் தான் மற்றவர்களுக்கு பணம் அனுப்புவதில் அலெக்சா கில்லாடியாக பயன்படுகிறது. அதுபோல, ஆப்பிள் சிரி, கூகுள்  அசிஸ்டெண்ட் போன்றவையும் களத்தில் உள்ளன.   இப்போது இந்தியாவில் வங்கிப்பணிகளில் அலெக்சா வெகுவாக நுழைந்து விட்டது. அமேசானின் அலேக்சா இப்போது வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் உதவுகிறது. என் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது...என் கடன் பாக்கி எவ்வளவு...வட்டி எவ்வளவு என்றெல்லாம் கேட்க முடியும். போன் போட்டு வங்கி கால் சென்டரில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள நிமிடக்கணக்கில் காத்திருக்கும் கொடுமை நீங்கும் என்றாலும் சைபர் கிரைம் கொடிகட்டிப்பறக்கும் இந்த காலகட்டத்தில் அலெக்சா உருவத்தில் பலரின் வங்கி கணக்கில் பணத்தை எடுக்கவும் வழியிருக்கும் என்று அச்சம் இல்லாமல் இல்லை என்கின்றனர் அலெக்சா பயன்படுத்தும் சிலர்.   ஐசிஐசிஐ, இண்டஸ் பாங்க், ஆக்சிஸ் பாங்க், யுனைடெட் பாங்க் ஆப் இண்டியா உட்பட சில வங்கிகள் இப்போது அலெக்சா, கூகுள் அசிஸ்டெண்ட்டை பயன்படுத்தி வருகின்றன. இதில் ஐசிஐசிஐ வங்கி,  அலெக்சா, கூகுள்  அசிஸ்டென்ட் இரண்டையும் பயன்படுத்தி வருகிறது. இண்டஸ் வங்கி, யுனைடெட் பாங்க் ஆகியவை அலெக்சாவை பயன்படுத்தி வருகின்றன. இவற்றின் வாடிக்கையாளர்கள், இந்த டிஜிட்டல் உதவியாளர் மூலம் வங்கி பணியல்லாத நேரங்களில் வங்கி சேவையை பயன்படுத்தி கொள்ள முடியும்.   வெளிநாடுகள் போல, இந்தியாவிலும் டிஜிட்டல் அசிஸ்டெண்ட் தொழில்நுட்பத்தை ஷாப்பிங், கிரெடிட் கார்டு பேமன்ட், மற்ற பில்கள் பேமன்ட் போன்றவற்றுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. மேற்கத்திய நாடுகளில் ‘செல்லே’ என்ற  டிஜிட்டல் முறை மூலம், வாய்ஸ் கமாண்ட் அளித்து, வங்கி கணக்கில் இருந்து இன்னொரு வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்ப  முடியும். குரல் மூலம் பதிவு செய்தாலே, அடுத்த நொடி பணம் , இன்னொரு கணக்கில் போய் விடும். பிட்சா ஆர்டர் தந்தால் குறித்து கொண்டு ஆர்டர் போட்டு விடும் அலெக்சா. இப்படி பல விஷயங்களுக்கு பயன்படுத்துவதால் பலரின் வேலை பறிபோகும் ஆபத்து உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளே வேலையின்மையால் தவிக்கும் போது, இந்தியாவில் வேலைவாய்ப்பு பல லட்சம் பறிபோகும் என்பது தெரிகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை