மின்னல் வேகத்தில் மிரள வைக்கிறது 6 லட்சத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை: பிரான்சை நெருங்குகிறது மகாராஷ்டிரா

தினகரன்  தினகரன்
மின்னல் வேகத்தில் மிரள வைக்கிறது 6 லட்சத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை: பிரான்சை நெருங்குகிறது மகாராஷ்டிரா

புதுடெல்லி: நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 19,148 பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நாட்டின் மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 6 லட்சத்து 4,641 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. எனினும், நோய் பாதிப்பு அதிகரித்தப்படி உள்ளது. மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் கொரோனா நோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 4 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 26 ஆயிரத்த 947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 லட்சத்து 59 ஆயிரத்து 860 பேர் சிகிச்சையில் குணமாகி இருக்கின்றனர். நேற்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,148 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 434 கொரோனா இறப்புக்கள் பதிவாகி உள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் இதுவரை 17,834 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோய் பரவல் அதிகமாக காணப்படுகின்றது. இங்கு மட்டும் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரத்து 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,053 பேர் இறந்துள்ளனர். உலகளவிலான பாதிப்பில் பிரான்ஸ் 2 லட்சத்துடன் 14வது இடத்தில் இருக்கிறது. நாளைக்குள் மகாராஷ்டிரா அதை நெருங்கி விடும் நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் பாதிப்பு 94 ஆயிரத்து 49 ஆக உயர்ந்துள்ளது. 1,264 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89,802 மற்றும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையானது 2,803ஆக உள்ளது.110 நாட்களில் 1 லட்சம் 44 நாட்களில் 5 லட்சம்* நாட்டின் முதல் கொரோனா பாதிப்பு நோயாளி, கடந்த ஜனவரி 30ம் தேதிதான் கேரளாவில் கண்டறியப்பட்டார்.* அதன் பிறகு, நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டுவதற்கு 110 நாட்களாகின.* ஆனால், அதற்கு அடுத்த 44 நாட்களில் இந்த எண்ணிக்கை 6 லட்சமாக உயர்ந்துள்ளது.* கடந்த ஞாயிற்றுக்கிழமை 5 லட்சத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை, அடுத்த 5 நாட்களில் கூடுதலாக ஒரு லட்சம் உயர்ந்து, நேற்று 6 லட்சத்தை எட்டியுள்ளது.

மூலக்கதை