டெல்லியில் திறப்பு நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி

தினகரன்  தினகரன்
டெல்லியில் திறப்பு நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி

புதுடெல்லி:  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்க நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று திறந்து வைத்தார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையிலுள்ள நோயாளிகளை மீட்க பிளாஸ்மா தெரபி முறையை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதனை ஐசிஎம்ஆர் ஒப்புதலுடன் கேரளாவை தொடர்ந்து டெல்லி அரசும் மேற்கொண்டது. இந்த சிகிச்சை டெல்லியில் 29 பேருக்கு மேற்கொள்ளப்பட்டு அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.இந்நிலையில், டெல்லியில் இந்தியாவின் முதலாவது பிளாஸ்மா வங்கியை ஐஎல்பிஎஸ் மருத்துவமனையில் முதல்வர் கெஜ்ரிவால் நேற்று தொடங்கி வைத்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக பிளாஸ்மாவைப் பெறுவதில் மக்கள் இதுநாள் வரை பல இடையூறுகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு இப்போது கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகிறேன். மேலும் பிளாஸ்மா தானம் செய்ய இப்போது அதிகளவில் முன்வருவார்கள் என்று நம்புகிறேன்,’’ என்றார்.

மூலக்கதை