ட்வீட் கார்னர்... நிறவெறியை வெறுப்போம்!

தினகரன்  தினகரன்
ட்வீட் கார்னர்... நிறவெறியை வெறுப்போம்!

பார்முலா 1 கார் பந்தயத்தில் பங்கேற்கும் மெர்சிடிஸ் அணி, நிறவெறிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் கறுப்பு நிற காரை அறிமுகம் செய்துள்ளது. நிறவெறிக்கு முடிவு கட்டுவோம் என்ற வாசகமும் அந்த காரில் பொறிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற நபர் ஒரு போலீஸ்காரரால் கழுத்து நெறித்து கொல்லப்பட்டதை அடுத்து நிறவெறிக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மெர்சிடிஸ் அணியின் இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நட்சத்திர வீரர் லூயிஸ் ஹாமில்டன் உள்ளிட்டோரும் இதற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். மெர்சிடிசின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட படம் பார்முலா 1 ரசிகர்களிடையே வைரலாகப் பரவி வருகிறது.

மூலக்கதை