பாக்.கில் நடத்தியது சர்ஜிக்கல் ஸ்டிரைக் சீனா மீது நடத்தியது ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’... புதிய பெயர் சூட்டியது மத்திய அரசு

தினகரன்  தினகரன்
பாக்.கில் நடத்தியது சர்ஜிக்கல் ஸ்டிரைக் சீனா மீது நடத்தியது ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’... புதிய பெயர் சூட்டியது மத்திய அரசு

கொல்கத்தா: ‘சீனாவின் 59 ஆப்களுக்கு தடை விதித்ததை அந்நாட்டின் மீது இந்தியா நடத்திய ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’ என, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வர்ணித்துள்ளார். பாகிஸ்தான் எல்லைக்குள் முகாமிட்டு இருந்த தீவிரவாத முகாம்கள் மீது, இந்திய ராணுவம் திடீரென எல்லைத்தாண்டி சென்று தாக்குதல் நடத்தியது. இதை ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்று மத்திய அரசு அழைத்து வருகிறது. இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு பழி தீர்க்கும் வகையில், சீனாவின் டிக்டாக் உட்பட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’ என்று புதிய பெயரை சூட்டியுள்ளது மத்திய அரசு. மேற்கு வங்க மக்களிடையே வீடியோ கான்பரன்சிங் மூலமாக மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று பேசியபோது, , ‘‘சீனாவின் செயலிகளை (ஆப்) தடை செய்த மத்திய அரசின் நடவடிக்கை, ஒரு ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’ எனலாம். நாட்டில் இப்போது 2 ‘சி’யை பற்றிதான் மக்கள் பேசுகின்றனர். ஒன்று கொரோனா; மற்றொன்று சீனா. இந்திய மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவே, சீனாவின் மீது ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’ நடத்தப்பட்டுள்ளது,’’ என்றார்.

மூலக்கதை