சேலஞ்சர் கோப்பை கால்பந்து

தினகரன்  தினகரன்
சேலஞ்சர் கோப்பை கால்பந்து

கொரோனா பீதி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் அமெரிக்காவிலும் மீண்டும் ஆரம்பித்துள்ளன. அப்படி 3 மாதங்களுக்கு முன்பு நடத்த வேண்டிய ‘சேலஞ்சர் கோப்பை’க்கான தேசிய பெண்கள் கால்பந்து லீக் போட்டி உட்டா மாநிலம், ஹெர்ரிமன் நகரில் தொடங்கியுள்ளது. அங்கு பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடக்கின்றன. இந்நிலையில் தகுதிச் சுற்று  போட்டி ஒன்றில் பந்தை கைப்பற்ற  சிகாகோ ரெட் ஸ்டார்ஸ் வீராங்கனை ஜூலியா பிங்காம்(எண் 23), போர்ட்லேண்ட் த்ரோன்ஸ் எப்சி வீராங்கனை சிமேன் சார்லி(கருப்பு சீருடை) ஆகியோர் வேகம் காட்டும் காட்சி. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கடைசிவரை 2 அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் இறுதிப்போட்டி  ஜூலை 26ம் தேதி நடக்கும்.

மூலக்கதை