ரூ14,500 கோடி முறைகேடு: அகமது படேலிடம் மீண்டும் விசாரணை

தினகரன்  தினகரன்
ரூ14,500 கோடி முறைகேடு: அகமது படேலிடம் மீண்டும் விசாரணை

புதுடெல்லி: குஜராத் மாநிலத்தை சேர்ந்த சந்தேசரா சகோதரர்கள், வங்கியில் ரூ.14,500 கோடி கடன் வாங்கி அதனை முறைகேடாக செலவு செய்துள்ளனர். இதனால், சட்ட விரோத பணப் பரிமாற்றம் மற்றும் வங்கி முறைகேடு தொடர்பாக அவர்கள் மீது சிபிஐ.யும், அமலாக்க துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. சந்தேசரா சகோதரர்கள் மூன்று பேரும் தலைமறைவாகி உள்ளனர். இந்த முறைகேட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின்அரசியல் செயலாளர் அகமது படேலின் மகன் பைசலுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இது பற்றி அகமது படேலிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 27, 30ம் தேதிகளில் அவரிடம் 17 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதேபோல், 3வது முறையாக நேற்றும் டெல்லியில் உள்ள அவருடைய வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மூலக்கதை