டெல்லி பங்களாவை காலி செய்து விட்டு லக்னோவில் பாட்டி வீட்டில் குடியேற போகிறார் பிரியங்கா: 6 மாதங்களுக்கு முன்பே தயார்

தினகரன்  தினகரன்
டெல்லி பங்களாவை காலி செய்து விட்டு லக்னோவில் பாட்டி வீட்டில் குடியேற போகிறார் பிரியங்கா: 6 மாதங்களுக்கு முன்பே தயார்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய கெடு விதிக்கப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி லக்னோவுக்கு குடி பெயர்வதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டு உள்ளதால், அவர் டெல்லியில் வசித்து வரும் லெட்யூன்ஸ் அரசு பங்களாவை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனது பாட்டி ஷீலா கவுல் குடும்பத்துக்கு சொந்தமான வீட்டிற்கு குடி பெயர உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இது குறித்து உபி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லாலன் குமார் கூறுகையில், ``பிரியங்காவுக்கு அரசு நோட்டீஸ் அளிப்பதற்கு முன்பே இந்த வீடு அவரது விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு தயாராக உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பே புதுப்பிக்கப்பட்டது. தற்போது அதனை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு முன்பு, கடந்த தேர்தலின் போதும், காந்தி ஜெயந்தி நடைபயணத்தின் போதும் அவர் இங்கு தங்கி உள்ளார். பிரியங்கா தனது கட்சிப் பணிக்காக மாதத்தில் 20 முதல் 22 நாட்கள் வரை உபி.யில்தான் தங்கி இருக்கிறார். எனவேதான், அவர் லக்னோவுக்கு குடியேற முடிவு செய்யப்பட்டது,’’ என்றார்.3 கிமீ தூரம்ஷீலா கவுல் முன்னாள் பிரதமர் நேருவின் சகோதர‍ர் மனைவியாவார். இவர் கடந்த 2015ல் இறந்து விட்டார். இவர் மத்திய அமைச்சராகவும், ஆளுநராகவும் இருந்துள்ளார். அவர் இறந்த பிறகு, அவருடைய குடும்பத்தினர் இந்த வீட்டை பயன்படுத்தாமல் அப்படியே வைத்துள்ளனர். ஷீலா கவுலின் வீடு, லக்னோவில் கோக்லே மார்க் என்ற இடத்தில் உள்ளது. இது, லக்னோவில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 

மூலக்கதை