மரகத சுரங்கத்தில் நிலச்சரிவு

தினமலர்  தினமலர்
மரகத சுரங்கத்தில் நிலச்சரிவு

யாங்கூன்: மியான்மர், மரகத சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ௧௬2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.அண்டை நாடான மியான்மர், மரகத சுரங்கத் தொழிலில் பெயர் பெற்றது. இங்கு, யாங்கூன் நகரில் இருந்து, 950 கி.மீ., துாரத்தில், ஹபாகந்த் நகரில் மரகத சுரங்கப் பணிகள் நடைபெறுகின்றன. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, நேற்று, இப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், சுரங்கப் பணிகளில் ஈடுபட்டிருந்த, 200க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், மண்ணில் புதைந்திருந்த, ௧62 பேரின் சடலங்களை மீட்டனர். அத்துடன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த, 54 பேரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். நிலச்சரிவு பகுதியில் மழை காரணமாக, மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.மரகத சுரங்கம், மலையடிவாரத்தில் உள்ளதால், அடிக்கடி நிலச்சரிவால் விபத்து ஏற்படுவதாக, சுற்றுப்புறத்தினர் தெரிவித்து உள்ளனர்.

மூலக்கதை