'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிடன் உறுதி

தினமலர்  தினமலர்
எச்  1 பி விசாவுக்கான தடையை நீக்குவேன்: அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிடன் உறுதி

வாஷிங்டன்,: ''நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, 'எச் - 1 பி விசா' வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவேன். ''இந்தியாவுடான உறவை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்,'' என, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடக்கவுள்ளது.

இதில், குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். கொரோனா பிரச்னை காரணமாக, அதிபர் தேர்தல் பிரசாரம் மந்தநிலையில் உள்ளது. ஆனாலும், டிரம்பும், பிடனும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பங்கேற்று, பிரசாரம் செய்து வருகின்றனர். 100 நாட்கள்இந்நிலையில், 'ஆசிய, அமெரிக்க, பசிபிக் ஐலாண்டர்' என்ற அமைப்பு சார்பில், வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், ஜோ பிடன் நேற்று பேசியதாவது:இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக, எச் - 1 பி விசா வழங்கப்படுகிறது.

அமெரிக்காவில் பணியாற்ற வரும் வெளிநாட்டவருக்கு, இந்த விசா முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அதிபர் டொனால்டு டிரம்ப், வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறி, இந்தாண்டு இறுதி வரை, எச் - 1 பி விசா வழங்குவதற்கு தடை விதித்துள்ளார். இதனால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் கடுமையான உழைப்பால் தான், அமெரிக்கா கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, நான் அதிபரானதும், முதல், 100 நாட்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்த முடிவு செய்துஉள்ளேன். அதில், இந்த விசா விவகாரமும் இடம் பெற்றுள்ளது. அதிபரானதும், எச் - 1 பி விசா வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவேன். விசா சீர்திருத்த மசோதாவை பார்லிமென்டிற்கு அனுப்பி, அதற்குள்ள தடைளை நீக்க நடவடிக்கை எடுப்பேன். அமெரிக்காவை தங்கள் உழைப்பால் கட்டமைத்த, ஏராளமான வெளிநாட்டவர், முறையான ஆவணங்கள் இல்லாமல் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடியரிமை வழங்க நடவடிக்கை எடுப்பேன். என் தலைமையிலான நிர்வாகத்தில், குடியேற்றக் கொள்கை என்பது குடும்பங்களை ஒன்றிணைப்பதாக இருக்கும். நவீனமயமானதாக இருக்கும். ஒருங்கிணைப்பு, பன்முக தன்மை ஆகியவை தான், அமெரிக்க குடியேற்ற கொள்கையை தாங்கி நிற்கும் துாண்கள். டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற கொள்கை மிகவும் மோசமானது; மனித நேயமற்றது.
இந்தியாவின் உதவிகிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் பேர், பல கனவுகளுடன் அமெரிக்காவில் பாதுகாப்பின்றி வசிக்கின்றனர். அவர்களின் கனவுகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். சில முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை உள்ளது. இந்த தடையை உடனடி யாக நீக்குவேன். க்ரீன் கார்டு வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் நீக்கப்படும். க்ரீன் கார்டு பெறுவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்படும். இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவை மேலும் பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பேன்.

ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு, இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பிரசார கூட்டங்களை தவிர்க்கும்படி அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால் டிரம்ப், இதை பொருட்படுத்தாமல், தொடர்ந்து பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.நான் இதுபோன்ற பிரசாரங்களில் ஈடுபடப் போவது இல்லை. அதிகாரி களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பேன்.இவ்வாறு, அவர் பேசினார்.இதற்கிடையே, அதிபர் தேர்தலில் பிரசாரம் செய்வது தொடர்பாக, களத்தில் உள்ள இரண்டு வேட்பாளர்கள் சார்பிலும், நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதில், டொனால்டு டிரம்ப்பை விட, ஜோ பிடன் அதிக நிதி திரட்டிஉள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை