சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து குறைந்து வருகிறது

தினமலர்  தினமலர்
சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து குறைந்து வருகிறது

புது­டில்லி:சீனா­வு­ட­னான நாட்­டின் வர்த்­தக பற்­றாக்­குறை, கடந்த நிதி­யாண்­டில்,
48.66 பில்­லி­யன் டாலர் ஆக குறைந்­துள்­ளது. இந்­திய மதிப்­பில் இது, 3.68 லட்­சம் கோடி ரூபாய் ஆகும்.

சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி குறைந்து வரு­வ­தால், அந்­நாட்­டு­ட­னான இந்­தி­யா­வின் வர்த்­தக
பற்­றாக்­குறை, கடந்த, 2019 – 20 நிதி­யாண்­டில், 3.67 லட்­சம் கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது என,
அர­சாங்­கத் தர­வு­கள் தெரி­விக்­கின்­றன.கடந்த நிதி­யாண்­டில், சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி,
4.93 லட்­சம் கோடி ரூபா­யா­க­வும், இந்­தி­யா­வி­லி­ருந்து சீனா­வுக்குஏற்­று­மதி, 1.25 லட்­சம் கோடி ரூபா­யா­க­வும்இருந்­தது.

கடந்த, 2018 – 2019 நிதி­யாண்­டில், இரு நாடு­க­ளுக்­கும் இடை­யே­யான வர்த்­த­கப் பற்­றாக்­குறை 4.04 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது.இதுவே அதற்கு முந்­தைய நிதி­யாண்­டான 2017 – 18ல் வர்த்­தக பற்­றாக்­குறை, 4.76 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.இந்­நி­லை­யில், தற்­போது அரசு, சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி ஆவதை குறைப்­ப­தற்­கான முயற்­சி­களில் இறங்கி உள்­ளது.

முதற்­கட்­ட­மாக, இறக்­கு­ம­திக்கு, சீனா­வைச் சார்ந்­தி­ருப்­ப­தைக் குறைக்க, பல தயா­ரிப்­பு­க­ளுக்­கான தொழில்­நுட்ப விதி­மு­றை­கள் மற்­றும் தரம் குறித்த விதி­மு­றை­களை உரு­வாக்­கு­வது போன்ற நட­வ­டிக்­கை­களை எடுத்துவரு­கிறது.மேலும், சீனா­வி­லி­ருந்து
இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­களை, சரா­சரி விலைக்­கும் குறை­வாக விற்­பனை செய்­வ­தால் உள்­நாட்டு உற்­பத்­தி­யா­ளர்­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தால், அத்­த­கைய பொருட்­கள் மீது, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்­கப்­பட்டுவரு­கிறது.

மூலக்கதை