ஓட்டல் துறை வருவாய் மீள 2 ஆண்டுகளாகலாம்

தினமலர்  தினமலர்
ஓட்டல் துறை வருவாய் மீள 2 ஆண்டுகளாகலாம்

புது­டில்லி:ஊர­டங்­கு­கள் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­பட்டு வரும் நிலை­யில், பல துறை­களில் செயல்­பா­டு­கள் திரும்­பிக் கொண்­டி­ருந்­தா­லும், விருந்­தோம்­பல் மற்­றும் ஓட்­டல் துறை­கள் பழைய நிலைக்கு திரும்­பு­வ­தற்கு, அதிக காலம் பிடிக்­கும் என்­பது ஆய்வு ஒன்­றில் தெரி­ய­வந்­து
உள்­ளது.
உல­க­ள­வி­லான சொத்து ஆலோ­சனை நிறு­வ­ன­மான, ஜே.எல்.எல்., நிறு­வ­னம் மேற்­கொண்ட கருத்­துக்­க­ணிப்­பில், ஓட்­டல் துறை­யில், பழைய வரு­வாயை எட்­டு­வ­தற்கு, இரண்டு
ஆண்­டு­கள் வரை ஆகும் என அத்­து­றை­யி­னர் கரு­து­வது தெரி­ய­வந்­துள்­ளது.

ஜே.எல்.எல்., ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:கொரோனா பர­வ­லால், மற்ற துறை­களை விட, விருந்­தோம்­பல், சுற்­றுலா, பய­ணம் ஆகிய துறை­கள் மிக­வும் அதிக
பாதிப்­புக்கு ஆளா­கி­யுள்­ளன.கணக்­கெ­டுப்­பின்­படி, ஓட்­டல் துறையை சேர்ந்த, 20 சத­வீ­தம் பேர், கடந்த ஆண்டு இருந்த வரு­வாய் நிலையை மீண்­டும் எட்ட, 6 முதல், 12 மாதங்­கள் ஆகும் என தெரி­வித்­துஉள்­ள­னர்.

மேலும், 60 சத­வீ­தம் பேர், பழைய வரு­வாயை திரும்பப் பெற, இப்­போ­தி­லி­ருந்து, 13 முதல் 24 மாதங்­கள் வரை ஆகும் என தெரி­வித்­துள்­ள­னர்.ஆடம்­பர ஓட்­டல் பிரி­வி­ன­ரில் பலர், வளர்ச்சி மெது­வா­கவே இருக்­கும் என்­றும், கடந்த ஆண்டு நிலையை எட்ட இன்­னும் இரண்டு
ஆண்­டு­கள் வரை ஆக­லாம் என்­றும்தெரி­வித்­துள்­ள­னர்.நிறு­வ­னங்­கள், பய­ணங்­க­ளுக்கு செலவு செய்­வதை கணி­ச­மாக குறைத்து வரு­வ­தால், ஆடம்­பர ஓட்­டல்­க­ளுக்­குப் பதி­லாக மத்­திய தர ஓட்­டல்­க­ளுக்கு அதிகம் பேர் செல்­லக்­கூ­டும் என்­றும் தெரி­வித்­துள்­ள­னர்.

ஊர­டங்கு தளர்த்­தப்­பட்டு, மாநில அர­சு­கள் அனு­ம­திக்­கும் பட்­சத்­தில், இரண்டு வாரங்­களில் ஓட்­டல்­களை திறப்­போம் என, 47 சத­வீ­தம் பேரும், ஒரே வாரத்­தில் துவங்­கு­வோம் என,
33 சத­வீ­தம் பேரும் தெரி­வித்­துள்­ள­னர்.இவ்­வாறு அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுஉள்­ளது.

மூலக்கதை