வளர்ச்சிக் கணிப்பை திருத்தியது ‘கேர் ரேட்டிங்ஸ்’ நிறுவனம்

தினமலர்  தினமலர்
வளர்ச்சிக் கணிப்பை திருத்தியது ‘கேர் ரேட்டிங்ஸ்’ நிறுவனம்

மும்பை:நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் வளர்ச்சி குறித்த தன் மதிப்­பீட்டை மாற்றி அறி­வித்­துஉள்­ளது, ‘கேர் ரேட்­டிங்ஸ்’ நிறு­வ­னம்.


கடந்த மே மாதத்­தில், நாட்­டின் வளர்ச்சி, நடப்பு நிதி­யாண்­டில், 1.5 –1.6 சத­வீ­தம் அள­வுக்கு
சரி­யும் என, இந்­நி­று­வ­னம் கணித்து அறி­வித்­தி­ருந்­தது. இந்­நி­லை­யில், தற்­போது அதை மாற்றி, 6.4 சத­வீ­தம் அள­வுக்கு சரி­வைக் காணும் என தெரி­வித்­துள்­ளது.கொரோனா பர­வல் அதி­க­ரிப்பு கார­ண­மாக, ஊர­டங்கு தொடர்ந்து நீட்­டிக்­கப்­பட்டு வரு­வ­தால், பொரு­ளா­தார
செயல்­பா­டு­கள் தாம­தமா­கும் என்ற அடிப்­ப­டை­யில், மதிப்­பீட்டை மேலும்குறைத்­துள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னம் மேலும் தெரி­வித்­துஉள்­ள­தா­வது:ஜூலை மாதத்­தில் கூட ஊர­டங்­கு­கள் விலக்­கப்­ப­டா­மல் இருப்­ப­தால், இயல்பு நிலை ஏற்­ப­டு­வது, மூன்­றா­வது அல்­லது நான்­கா­வது காலாண்டு வரை ஆகக் கூடும் என கரு­தப்­ப­டு­கிறது.இத­னால் நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, 6.4 சத­வீ­தம் அள­வுக்கு சரி­யும் என கணிக்­கப்­ப­டு­கிறது.
கடந்த நிதி­யாண்­டில் வளர்ச்சி, 4.2 சத­வீ­த­மாக இருக்­கும். இது கடந்த, 10 ஆண்­டு­களில்
குறை­வா­ன­தாக இருக்­கும். அடுத்த நிதி­யாண்­டைப் பொறுத்­த­வரை, உரு­வா­கும் சூழலை பொறுத்து அதன் போக்­கில்­தான் கணிக்க இய­லும்.விருந்­தோம்­பல், பய­ணம், பொழு­து­போக்கு உள்­ளிட்ட துறை­கள் மீள, அதிக காலம் பிடிக்­கும். வேலை இழப்பு, சம்­ப­ளக் குறைப்பு ஆகி­ய­வற்­றால், பண்­டிகை காலத்­தில் செலவு செய்­வது குறை­வா­கவே இருக்­கும்.

கிரா­மப் புறங்­களில் வரு­வாய் அதி­க­ரித்­தா­லும், எதிர்­பா­ராத இந்த சூழ­லில், குறைந்­து­விட்ட நுகர்வு திறனை, ஈடு செய்­வ­தாக அது இருக்­காது.இவ்­வாறு, ‘கேர் ரேட்­டிங்ஸ்’ தெரி­வித்­துஉள்­ளது.

மூலக்கதை