தங்க இறக்குமதி 86 சதவீதம் சரிவு

தினமலர்  தினமலர்
தங்க இறக்குமதி 86 சதவீதம் சரிவு

புது­டில்லி:நாட்­டின் தங்க இறக்­கு­மதி, கடந்த ஜூன் மாதத்­தில், 86 சத­வீ­தம் சரிந்­துள்­ள­தாக
தெரி­ய­வந்­துள்­ளது. கொரோனா பர­வு­வதை தடுப்­ப­தற்­காக, நாடு தழு­விய அள­வில், ஊர­டங்கு அமல்­ப­டுத்­திய நிலை­யில், தங்க இறக்­கு­மதிசரிந்­துள்­ளது.


இது குறித்து, அரசு உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:நாடு முடக்­கப்­பட்­டதை அடுத்து, தேவை குறைந்­தது; சர்­வ­தேச விமான பய­ணங்­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டது; நகைக் கடை­கள்
மூடப்­பட்­டது உள்­ளிட்ட பல்­வேறு கார­ணங்­க­ளால், தங்கஇறக்­கு­மதி, கடந்த ஜூன் மாதத்­தில், 86 சத­வீதம் அள­வுக்கு சரி­வைக்கண்­டுள்­ளது.

உல­க­ள­வில், தங்க இறக்­கு­ம­தி­யில், இரண்­டா­வது இடம் வகிக்­கிறது, இந்­தியா. இந்­நி­லை­யில், கடந்த ஜூன் மாதம், 11 டன் தங்­கம் மட்­டுமே இறக்­கு­மதி ஆகி­யுள்­ளது. இதுவே, கடந்த ஆண்டு, இதே ஜூன் மாதத்­தில், 77.73 டன் தங்­கம் இறக்­கு­மதி ஆகி­யி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.மதிப்பு அடிப்­ப­டை­யில் பார்த்­தால், கடந்த ஆண்டு ஜூன் மாதத்­தில், 20 ஆயி­ரத்து, 385 கோடி ரூபாய் அள­வுக்கு இறக்­கு­மதி செய்­யப்­பட்ட நிலை­யில், கடந்த ஜூன் மாதத்­தில், 4,596 கோடி ரூபாய் அள­வுக்கே இறக்­கு­மதி ஆகி­யுள்­ளது.

ஊர­டங்­கு­கள் தளர்த்­தப்­பட்டு, பண்­டிகை கால­மும் நெருங்­கும் சம­யத்­தில் தான், தங்க
விற்­பனை மீண்­டும் அதி­க­ரிக்க துவங்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அவர்
கூறி­னார்.

மூலக்கதை