7 வயது சிறுமி வன்கொடுமை விவகாரம்..! உரிய நீதியும், உதவியும் கிடைத்திட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் துணை நிற்கும் என அறிக்கை

தினகரன்  தினகரன்
7 வயது சிறுமி வன்கொடுமை விவகாரம்..! உரிய நீதியும், உதவியும் கிடைத்திட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் துணை நிற்கும் என அறிக்கை

அறந்தாங்கி: அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. காணாமல் போன அறந்தாங்கியைச் சேர்ந்த 7 வயது சிறுமியின் உடல் வறண்ட குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன் கோடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த விசாரணையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது; புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தில் 2 தினங்களுக்கு முன் காணாமல் போன 7 வயது சிறுமி தண்ணீர் இல்லாத செடிகள் அடர்ந்த குளத்தில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்குழந்தையை பார்க்கும் போது தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய வலியை உணர்கிறோம். சம்பவம் அறிந்த உடனே புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டு மேலும் விசாரணையை துரிதப்படுத்தும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. பெண் குழந்தையை நாம் வணக்கும் மகாலஷ்மி போல் செல்வா மகளாக வளர்த்து வரும் இக்கால கட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற கொடும் சம்பவம் நம் சமூகத்திற்கு தலை குனிவை ஏற்படுத்துகிறது. இதனை நாம் எளிதில் கடந்து செல்ல இயலாத ஓன்று, இதனை முற்றிலும் ஒடுக்க வேண்டும். இதுபோன்ற அரக்கர்கள் சமூகத்தில் எந்த உயர்நிலையில் இருந்தாலும் போக்ஸோ சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தந்து, பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு உரிய நீதியும், உதவியும் கிடைத்திட என்றும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் துணை நிற்கும்.  இதுபோன்ற கொடூரர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை, யாரிடம் பழகுகிறார்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை கவனித்து கொள்ள வேண்டும்.

மூலக்கதை