டுவிட்டர் - தென்னிந்திய நடிகர்களில் முதலிடத்தில் மகேஷ் பாபு

தினமலர்  தினமலர்
டுவிட்டர்  தென்னிந்திய நடிகர்களில் முதலிடத்தில் மகேஷ் பாபு

சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கணக்குகளை வைத்துள்ளனர். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவைதான் அவர்கள் அதிகம் பயன்படுத்தும் தளங்களாக உள்ளன.

மலையாள சினிமா பிரபலங்கள் அதிகமாக பேஸ்புக்கையும், தமிழ் சினிமா பிரபலங்கள் அதிகமாக டுவிட்டரையும், நடிகைகள் மட்டும் இன்ஸ்டாகிராமை அதிகமாகவும் பயன்படுத்துகிறார்கள்.

தென்னிந்திய நடிகர்களில் டுவிட்டரில் அதிக பாலோயர்களைப் பெற்ற நடிகராக மகேஷ் பாபு இருக்கிறார். அவரது டுவிட்டர் கணக்கை தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தொட்டுள்ளது. அதாவது 1 கோடி பாலோயர்கள்.

மகேஷ் பாபுவுக்கு அடுத்து தமிழ் நடிகர் தனுஷ் 9.1 மில்லியனுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். நான்கு மாதங்களுக்கு முன்பாகத்தான் தனுஷை முந்தினார் மகேஷ். இந்த நான்கு மாதங்களில் அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் கூடிவிட்டது.

இந்திய அளவில் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் 43 மில்லியன் பாலோயர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

மூலக்கதை