நாட்டில் என்ன நடந்தால் என்ன? - போட்டோ போடுவதை நிறுத்தாத நடிகைகள்

தினமலர்  தினமலர்
நாட்டில் என்ன நடந்தால் என்ன?  போட்டோ போடுவதை நிறுத்தாத நடிகைகள்

நம் நாடு மட்டுமல்ல, இந்த உலகமே கொரோனா தொற்று காரணமாக திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. இது ஒரு புறமிருக்க இந்திய சீன எல்லையில் பதட்டம், சாத்தான்குளத்தில் இருவரது மரணம் என சமூக வலைத்தளங்களில் அது பற்றியே பல்வேறு பதிவுகள், வீடியோக்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாத சில நடிகைகள் அவர்களது இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பேஸ்புக் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களைப் பதிவிடுவதை மட்டும் நிறுத்துவதில்லை. அந்தப் புகைப்படங்கள் சாதாரணமாக இருந்தால் பரவாயில்லை. பல புகைப்படங்கள் மிகவும் கிளாமராகவும், சில புகைப்படங்கள் கவர்ச்சியாகவும் இருக்கின்றன.

இடையில் இரு வாரங்களக்கு முன்பு ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். அன்று மட்டும் பெயருக்கு 'RIP' எனப் பதிவிட்டு மறுநாளே மீண்டும் தங்களது புகைப்படங்களை பதிவிடுவதை தொடர ஆரம்பித்தனர் பலர். இன்னும் சிலரோ 'விர்ச்சுவல் போட்டோகிராபி' என்ற புதிய முறையில் போட்டோஷுட் நடத்தி அவற்றையும் பகிர்கிறார்கள்.

சிலருக்கு புகைப்படங்களை பதிவிடாமல் இருக்க முடியவில்லை. புதிய படங்கள் இல்லாத காரணத்தால் 'த்ரோபேக்' என்ற பெயரில் பழைய புகைப்படங்களைக் கூட பதிவிட்டு தங்களது ஆசையை தீர்த்துக் கொள்கிறார்கள்.

கொரானோ நேரத்தில் பலரும் சமூக வலைத்தளம் பக்கம் இருப்பதே இதற்குக் காரணம்.

மூலக்கதை