சுனாமி படப்பிடிப்பை முடித்தார் லால்

தினமலர்  தினமலர்
சுனாமி படப்பிடிப்பை முடித்தார் லால்

கடந்த மூன்று மாதங்களாக நிலவும் கொரோனா தாக்கம், அதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது மலையாள திரையுலகில் படப்பிடிப்பு நடத்துவதற்கு கட்டுபாடுகளுடன் கூடிய தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகா விட்டாலும் ஏற்கனவே பாதியில் படப்பிடிப்பு நின்று போயிருந்த ஒரு சில படங்கள் மளமளவென படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்..

அந்தவகையில் இந்த ஊரடங்கு சமயத்தில் முதல் ஆளாக தனது மகன் ஜூனியர் லால் இயக்கி வரும் சுனாமி என்கிற படத்தின் படப்பிடிப்பை துவங்கினார் சண்டக்கோழி வில்லன் லால். கிட்டத்தட்ட 50 பேர் கொண்ட குழுவுடன் அரசாங்கம் விதித்த சுகாதார கட்டுப்பாடுகளின்படி முகத்தில் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியுடன் இந்தப்படப்பிடிப்பை நடத்திய சுனாமி படக்குழு, தற்போது வெற்றிகரமாக தங்களது படப்பிடிப்பை முடித்துள்ளனர். நடிகர் லால் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளதோடு முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார்.

மூலக்கதை