தியேட்டர்களைத் திறக்க கோரிக்கை

தினமலர்  தினமலர்
தியேட்டர்களைத் திறக்க கோரிக்கை

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 100 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தியேட்டர்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், 100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவதாகவும், சினிமா தொழிலில் 60 சதவீத வருவாயை தியேட்டர்கள்தான் தருகின்றன, அதனால் தியேட்டர்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

உலகத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஹாங்காங், யுஏஇ, அமெரிக்கா, பெல்ஜியம், மலேசியா ஆகிய நாடுகளில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

'ரெட் சோன்' பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் தியேட்டர்களைத் திறக்க அனுமதித்தால் அதிக பட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் பார்த்துக் கொள்வோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

மூலக்கதை