ரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!

தினகரன்  தினகரன்
ரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில தினங்களாக லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன இடையே பதற்றம் நிலவி வருகிறது இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று .நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ரூ.18,148 கோடி மதிப்பிலான 33 போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து 18,148 கோடி ரூபாய் மதிப்பில் 33 போர் விமானங்களை வாங்கப்பட உள்ளது. இவற்றில் 12 சுகோய் 30 எம்கேஜே ரக விமானங்கள் மற்றும் 21 மிக்-29 எஸ் ரக போர் விமானங்கள் அடங்கும். மேலும், விமானப்படை மற்றும் கடற்படைக்கு 248 அஸ்திரா ஏவுகணைகளை வாங்கவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே பிரதமர் மோடி, ரஷ்ய நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார். இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றிப் பெற்ற 75 ஆண்டு நிறைவு விழாவுக்கும், ரஷ்யாவில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு வாக்களிப்பது வெற்றிகரமாக நிறைவேறி உள்ளதற்கும் பிரதமர் மோடி, புதினுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை