'புதின் இல்லாமல் ரஷ்யா கிடையாது' என்ற கருத்து பலித்தது....2036-ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக பதவி வகிக்க தேர்வு செய்யப்பட்ட விளாதிமிர் புதின்..!!

தினகரன்  தினகரன்
புதின் இல்லாமல் ரஷ்யா கிடையாது என்ற கருத்து பலித்தது....2036ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக பதவி வகிக்க தேர்வு செய்யப்பட்ட விளாதிமிர் புதின்..!!

மாஸ்கோ: ரஷ்யாவில் அதிபராக பதவி வகிக்கும் ஒருவரின் பதவிகாலம் வெறும் 6 ஆண்டுகள், மேலும் அவர் 2 முறைக்கு மேல் அதிபராக பதவி வகிக்க இயலாது. இந்நிலையில் 2000ம் ஆண்டு முதல் 2008 வரை ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் பதவி வகித்தார். அப்பதவியில் இருந்து பதவி விலகிய புதின் 2012ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். பிறகு 2012ம் ஆண்டில் மீண்டும் ரஷ்யாவின் அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டார். அவருடைய ஆட்சிகாலம் 2024 வரை இருக்கின்ற நிலையில் மேலும் 12 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசியல் வட்டாரங்கள் முடிவு செய்தனர். அதன் விளைவாக அந்நாட்டின் அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வர முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த மாற்றத்திற்கான முடிவினை மேற்கொள்ள மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று புதின் கூற 25ம் தேதியில் இருந்து 7 நாட்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்குச்சீட்டு முறையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.98% வரை பதிவான வாக்குகளில் புதினே 2036ம் ஆண்டு வரை அதிபராக நீடிக்கலாம் என்று 76.9% மக்கள் வாக்களித்துள்ளனர். 21% மக்கள் இந்த சட்டத்திருத்ததிற்கு எதிராக வாக்கு பதிவு செய்துள்ளனர். இப்போது 67 வயதாகும் புதின் 83 வயது வரை அதிபராக ஆட்சி செய்ய முடியுமா என்று பலரும் விமர்சனத்தையும் வைத்துள்ள நிலையில் தற்போது 2036-ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக பதவி வகிக்க விளாதிமிர் புதின் தேர்வு செய்யப்பட்டு அனைவருடைய ஆராவாரங்கள் மற்றும் சர்ச்சைக்கூரிய விமர்சனங்களை பெற்றுள்ளார்.* தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2036ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் பதவி வகிக்க தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த உரையாடலில் ரஷிய அதிபர் புதின் இந்தியா வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மூலக்கதை