சங்ககராவுக்கு சம்மன்: வேகமெடுக்கும் சூதாட்ட புகார் | ஜூலை 01, 2020

தினமலர்  தினமலர்
சங்ககராவுக்கு சம்மன்: வேகமெடுக்கும் சூதாட்ட புகார் | ஜூலை 01, 2020

கொழும்பு: உலக கோப்பை பைனல் (2011) சூதாட்டம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, இலங்கை அணி முன்னாள் கேப்டன் சங்ககராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

இந்தியாவில் நடந்த 2011 உலக கோப்பை பைனலில் சூதாட்டம் நடந்ததாக இலங்கை முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே தெரிவித்தார். இதுகுறித்து தற்போது விசாரணை நடக்கிறது. 

அப்போதைய இலங்கை தேர்வுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வாவிடம், போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இவரது தகவல் அடிப்படையில், இந்தியாவுக்கு எதிரான பைனலில் 20 பந்தில் 2 ரன் எடுத்த துவக்க வீரர் உபுல் தரங்காவிடம் விசாரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பைனலில் இலங்கை அணி கேப்டனாக இருந்த சங்ககரா, இன்று காலை 9:00 மணிக்கு சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

மூலக்கதை